ஈரானின் கார்க் தீவு மீது ட்ரம்ப் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?

ஈரானுடனான போர் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.

ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு இந்த கார்க் தீவு மூலமாகவே நடைபெறுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்த மையம் முடக்கப்பட்டால், ஈரான் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்பது ட்ரம்பின் கணக்காகும் என அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post