வருடத்தின் முதலாவது காலாண்டில் புலம்பெயர் அந்நிய செலாவணி 27% ஆக சாதனை அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியின் அளவு கடந்த வருடத்தின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 26.5% அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 2026 ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 2.294 பில்லியன் அமெரிக்க டாலர்கள் புலம்பெயர் அந்நிய செலாவணியாக நாட்டிற்கு கிடைக்க பெற்றுள்ளது.

2025 வருடத்தின் முதல் மூன்று மாத காலப்பகுதியினுள் கிடைக்கப்பெற்ற புலம்பெயர் தொழிலாளர்களின் அந்நியச் செலாவணியின் அளவு 1,815 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
 
(1.815 பில்லியன்) 2026 ஜனவரி மாதத்தில் 751 மில்லியன் டாலர்கள், பெப்ரவரி மாதத்தில் 729மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் மார்ச் மாதத்தில் 815மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளது.
அரசாங்கத்தின் நிதி மீதான நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழிலாளர்களை சட்டப்பூர்வ வழிகளைப் பயன்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஊக்குவித்ததன் காரணமாக, நாட்டிற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப் பரிமாற்றங்களின் அளவு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை 62,145 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
Previous Post Next Post