இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் பால் மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post