நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்

 இலங்கையின் 78ஆவது சுதந்திரதினம் இன்று (02.04.2026) கொண்டாடப்பட்டு வருகிறது.

இலங்கை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.

இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் தேசிய சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

கல்முனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.





Previous Post Next Post