மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி - இன்றைய நாணய மாற்று விகிதம்

கடந்த வாரத்துடன் (19) ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி ரூ. 313.82, ஆகவும், கொள்முதல் பெறுமதி ரூ. 299.71 ஆகவும் பதிவாகியுள்ளது.


பிராங் , பவுண்ட்டின் பெறுமதிகள்

அத்தோடு, சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை பெறுமதி ரூ. 351.49, ஆகவும், கொள்முதல் பெறுமதி ரூ. 331.63 ஆகவும் பதிவாகியுள்ளது.

பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி ரூ. 391.80, ஆகவும், கொள்முதல் பெறுமதி ரூ. 372.90 ஆகவும் பதிவாகியுள்ளது.


Previous Post Next Post