விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மாகும்புர பல்துறை போக்குவரத்து மத்திய நிலையத்திற்கு இடையே இயங்கும் சொகுசு பேருந்து சேவை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மிகவும் வினைத்திறனான, வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவை இணைந்து இந்தச் சேவையை முன்னெடுக்கின்றன.
Previous Post Next Post