இந்த ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத் துறை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும்
சுற்றுலா அபிவிருத்தி திட்டம் 2026-2028 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் யாழ்ப்பாண
மாவட்டத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றிற்காக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நிலைபேறாண சுற்றுலாத் துறையை உறுதி செய்வதற்காக இலங்கையின் சுற்றுலாத் திறன் கொண்ட பயணங்களை அடையாளம் கண்டு அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக கவனம் செலுத்தி 9 மாகாணங்களையும் இணைக்கும் வகையில் 2026 - 2028 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான மொத்த மதிப்பீடு 2,667.03 மில்லியன் ரூபாய்.