இலங்கையில் பெரும் ஆபத்தில் 5,000 பேர்! வெளியான அதிர்ச்சி தகவல்

 இலங்கையில் சுமார் 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் (Final Stage) உள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 300 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பின்வரும் நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

சிறுநீரக நோய் நிபுணர் நலக ஹேரத், நீரிழிவு (Diabetes) மற்றும் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) உள்ளவர்கள் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களது சிறுநீரகங்களை முழுமையாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பல நோயாளர்கள் நோய் முற்றிய பின்னரே சிகிச்சைக்கு வருகின்றனர்.முறையான பரிசோதனைகளை முன்கூட்டியே செய்வதன் மூலம் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தைக் குறைக்க முடியும்.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவையே சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணங்களாக மருத்துவ நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து, முறையான பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதன் மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post