திட்வா புயலால் சேதமடைந்த நுவரெலியா வீதியை புணரமைக்கும் பணி ஆரம்பம்

 திட்வா புயலால் கடுமையாக சேதமடைந்த நுவரெலியா நகர வீதியை (B-331) புணரமைக்கும் பணி, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று (25) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.​


 நுவரெலியா நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ. 205 மில்லியன் ஆகும். இப்பணியை 06 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியில் நடைபெற்ற இதன் ஆரம்க விழாவில், கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மேயர் காமினி வனிகசேகர, மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post