உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அரசாங்க அதிபருக்கு அதிமேதகு சனாதிபதி அறிவுறுத்தல்

யாழ்ப்பாண மாவட்டத்தில்  சிறப்பான  உள்ளக விளையாட்டு அரங்கு  ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரித்த அதிமேதகு சனாதிபதி அவர்கள், மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து,  இத் திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதாக - சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நேற்று(16.01.2026) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் அதிமேதகு சனாதிபதி தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உள்ளக விளையாட்டு அரங்கு  மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரிவுபடுத்துமாறு அரசாங்க அதிபரை அதிமேதகு சனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post