வனப்பகுதியில் விசேட சுற்றிவளைப்பு: சுமார் 80000 கஞ்சா செடிகள் அழிப்பு

 கோனகங்கார - யால வனப்பகுதியின் 05ஆம் மண்டல பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (16.01.2026) பொலிஸ் விசேட அதிரடிப்படை புத்தள முகாமின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதன்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 80,660 கஞ்சா செடிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கஞ்சா செடிகள் தீ வைத்து எரிப்பு

இதேவேளை ஆதாரத்திற்கு மாதிரிகளை எடுத்ததன் பின்னர், கஞ்சா செடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.


இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ய கோனகங்கார பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post