அமெரிக்க (USA) ஜனாதிபதி ஜோபைடன் (Joe biden) கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கு கடந்த 17ஆம் திகதிக்கு கோவிட் அறிகுறிகள் தென்பட்டதால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் டெலாவேரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதோடு அவரது உடல்நிலையை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
குணமடைந்த ஜோபைடன்
இது தொடர்பில் அவரது வைத்தியர் கெவின் ஓ கானர், ஜனாதிபதி ஜோபைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கோவிட் பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. அவர் தனது நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றார்.
இதனைதொடர்ந்து, ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய நிலையில் நான் நன்றாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.