சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே - பெங்களூரு இடையேயான போட்டிக்கான டிக்கெட்கள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இதனால் இந்த போட்டிக்கான டிக்கெட்டும் சிறிது நேரத்திலேயே விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.
சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி வரும் 5ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.