முகக்கவசம் அணியுங்கள்...! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை



நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஆஸ்த்துமா மற்றும் சுவாச நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் இருமல் உள்ள சிறுவர்கள் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

குறித்த தகவல்களை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா (Deepal Perera) தெரிவித்துள்ளார்.

உரிய சுகாதார நடைமுறை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இன்புளுவென்சா மற்றும் சாதாரண வைரஸ் தொற்று என்பன தற்போது பரவி வரும் நிலையில், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய காலத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவி வருவதால், அனைவரும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இருமல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதால் குறித்த வைரஸ் தொற்று பரவலடைவதில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் எனவும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post