நெல் சந்தைப்படுத்தல் சபை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டமாக ஆரம்பித்த 500 ஏக்கர் வயல் நிலத்தில் உற்பத்தி செய்த சம்பா உற்பத்தி நேற்று (20) அறுவடை செய்யப்பட்டது.
விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர வின் பங்குபற்றுதலுடன் இந்த அறுவடை நிகழ்ச்சி அங்குனகொலபெலஸ்ஸ புதிய வாவி வயலில் இடம்பெற்றது.
சந்தையில் ஏனைய அரிசிகளின் விலை குறைந்து காணப்படும் போதும் கீரி சம்பா அரிசியின் விலை அதிகரித்திருப்பதனால் விதை நெல் உற்பத்தியை அதிகரிப்பதே இவ்வேளைத் திட்டத்தின் நோக்கமாகும்.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விவசாய நம்பிக்கை நிதியத்தினால் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு 300 விவசாயிகளுக்கு 500 ஏக்கரில் உற்பத்தி செய்வதற்காக கீரி சம்பா விதை நெல் மற்றும் ஏனைய விவசாய உபகரணங்கள் இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு ஏக்கருக்கு 500 கீரி சம்பா விதை நெல் உற்பத்தி தற்போது மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கீரி சம்பா ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இதுவரை செய்கை பண்ணப்படாது இருந்ததுடன் முதல் தடவையாக கடந்த பெரும்போகத்தில் 100 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டதுடன் அதன் அறுவடையை அதிகரிக்க முடிந்தது
இந்த 500 ஏக்கர் மொத்த நெல் அறுவடை நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமர வீர நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட விற்கு பணிபுரை வழங்கினார்.
அதன்படி எதிர்வரும் சில நாட்களுக்குள் கீரி சம்பாவை அரசாங்கம் 130 ரூபா விலைக்கு கொள்வனவு செய்ய ஆரம்பிக்கவுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தொட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமர வீர நாட்டில் கீரி சாம்பார் பற்றாக்குறை காணப்படுவதனால் இம்முறை சிறுபோகத்தில் கீரி சம்பா அதிகமாக செய்கை பண்ணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வலியுறுத்தினார்.
அவ்வாறே 360 ரூபாவில் காணப்பட்ட கீரி சாம்பா அரிசி 1 கிலோவின் விலை தற்போது 260 ரூபா வரை குறைந்துள்ளதாகவும், கீரி சம்பாவுக்காக அரசின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் எதிர்காலத்தில் பற்றாக்குறை இன்றி கீரி சம்பா அரிசியை சொல்வனம் செய்யக் கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டார்.
நமது நாட்டில் அதிகமானவர்கள் கீரி சாம்பா அரிசிற்கு அதிக விருப்பம் தெரிவிப்பதாகவும் , கடந்த காலங்களில் கீரி சம்பாவின் விலை அதிகரித்து காணப்பட்டதாகவும் இதனால் அதிகமாக அதனை செய்கை பண்ணுவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்னொரு சிறு போகத்தில் 70,000 ஹெக்டயரை விட அதிகமாக கீறி சாம்பா காணப்பட்டதாகவும் தற்போது கீரி சாம்பா அரிசியின் விலை கணக்கெடுக்கப்படும் போது குறைந்த விலையில் காணப்படுவதாகவும், அடுத்த பெரும்போகத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2000ஏக்கரில் கீரி சாம்பா செய்கையை அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இம்முறை நெல் கொள்வனவிற்காக அரசாங்கம் சிறிய மற்றும் மத்திய அரிசி ஆலை உரிமையாளர்களின் ஊடாக நெல் கொள்வனவு வேலை திட்டத்தை மேற்கொண்டதாகவும், அதற்காக அவர்களுக்கு 25 தொடக்கம் 50 ரூபாய் வரை கடனுதவி ஒன்றை அரசாங்கம் வழங்குவதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையில் கடனுதவியை பெறாது அவர்களின் சொந்தப் பணத்திலிருந்து நெல் கொள்வனவு செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனால் கடந்த இரண்டு போகங்களிலும் நெல் சந்தைப்படுத்தல் சபை இலாப மீட்டும் நிலைமைக்கு மாறியதாகவும் இம்முறை சபை தனது சொந்த நிதியிலிருந்து குறிப்பிட்ட அளவு நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் மேலும் விவரித்தார்.