அமெரிக்க தீவொன்றில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்



அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு புவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுனாமி அபாய எச்சரிக்கை

இந்நிலையில் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.7 அலகுகளாகப் பதிவானதாக கூறப்படுகின்றது.

மேலும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பிக் ஐலண்ட் பகுதியில் நன்கு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை எனவும் சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
Previous Post Next Post