இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 61 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டி இன்று (11.2.2024) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணி முன்னிலை
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.