நாணய சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி



இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கட் போட்டி சற்றுமுன் ஆரம்பமாக்கியுள்ளது.

குறித்த கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (11.1.2023) நடைபெற்றுவருகின்றது.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

சிம்பாப்வே அணி
போட்டியில் முதலில் துடுப்பாடிய வரும் சிம்பாப்வே அணி 7.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ, செவோன் டெனியல், குசல் மெந்திஸ், சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, சரித் அசலங்க, சஹன் ஆராச்சிலாகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர தில்ஷான் மதுஷங்க ஆகியோர்  பங்கேற்கின்றனர்.

இலவச வாய்ப்பு
இந்நிலையில், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியை இலவசமாக காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் C&D பிரிவுகள் இவ்வாறு பார்வையாளர்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post