வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்த கரட்டின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்


நாட்டில் வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த கரட்டின் விலை இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவையும் தாண்டி விற்பனை செய்யப்பட்ட கரட்டின் விலை இன்று 1,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

பேலியகொட சந்தை நிலவரத்தின் படி,  இன்றையதினம் ஒரு கிலோ கிராம் கரட்டின் மொத்த விலை 1,000 தொடக்கம் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

போஞ்சி ஒரு கிா கிராமின் மொத்த விலை  550 ரூபா முதல் 600 ரூபா வரையும், கோவா 600 ரூபா முதல் 650 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றது.

தக்காளி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 200 ரூபா முதல் 300 ரூபா வரையும்,  லீக்ஸ் 400 ரூபாவாகவும்,  கத்திரிக்காய் 550 ரூபா முதல் 600 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றது.
Previous Post Next Post