அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் இடைநிலை பிரிவின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த வகையினருக்கான 2500 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (10.01.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் 4 இலட்சம் பேரை நிவாரண உதவித் திட்டத்திற்கு உள்வாங்கத் தயாராக இருக்கின்றோம்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 20 இலட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை நான்கு இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.