திபெத்தில் உள்ள சிசாங் பகுதியில் நிலநடுக்கமொன்று நேற்று(07.01.2024) காலை பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.