உலகக் கிண்ணத் தொடரில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷ் பத்திரனவுக்கு பதிலாக சகலதுறை வீரரான அஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் அவரது பெயர் ஐ.சி.சி நிகழ்வு தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புள்ளிகள் பட்டியல்
தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை புள்ளி பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.