இலங்கையை வீழ்த்திய இந்திய அணிக்கு மோடி வாழ்த்து

 


இலங்கை அணியை தோல்வியடையச் செய்த இந்திய அணிக்கு அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை 302 ஓட்டங்களினால் வீழ்த்தியது.


இந்த வெற்றி தொடர்பில் இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.


அபார வெற்றி


மேலும், உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்தியாவின் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அபாரமான கூட்டு முயற்சி, திடமான நம்பிக்கை என்பனவற்றின் மூலம் இந்திய அணி போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post