சீதாவக ஒடிசி சுற்றுலா தொடருந்து மீண்டும் சேவையில்

 


சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா தொடருந்து சேவையானது மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.


எதிர்வரும், அக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.


இதற்கான ஆசன முன்பதிவுகளை இணையவழி முறையில் அல்லது ஆசன முன்பதிவு வசதியுடன் தொடருந்து நிலையங்களில் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post