அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 

நாட்டில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு அவசியம் என தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று(25.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல் நிலைக்கும், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறும் சம்பள அதிகரிப்பு தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கத்திற்கு எச்சரிக்கை


மேலும், சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக இதன்போது அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.


குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், அகில இலங்கை பொது நிர்வாக உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திசாநாயக்க, தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் டி.எம்.பி.அபேரத்னஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

Previous Post Next Post