ஜேர்மன் கடற்பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்து: பலர் மாயம்

 

ஜேர்மனிக்கு அருகில், வட கடல் பகுதியில், இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு கப்பல் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


“பொலேசி” மற்றும் “வெரிட்டி” என்னும் இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், “வெரிட்டி” கப்பல் மூழ்கியிருக்கலாம் என ஜேர்மன் தரப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.


பிரித்தானிய சரக்குக் கப்பலான “வெரிட்டி” , ஜேர்மனியின் பிரேமன் என்னுமிடத்திலிருந்து, இங்கிலாந்திலுள்ள இமிங்ஹம் துறைமுக நகரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே “பொலேசி” என்னும் பஹாமாஸ் நாட்டுக் கப்பல், ஜேர்மனியின் ஹாம்பர்கிலிருந்து, ஸ்பெயினிலுள்ள லா- கொருணா துறைமுகம் நோக்கி பயணித்துள்ளது.


தேடும் பணி


குறித்த விபத்தில் ஒருவர் மாத்திரம் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், காணாமல் போன ஏனையவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில், “பொலேசி” கப்பல், 22 பணியாளர்களுடன் கடலில் மிதந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post Next Post