வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்! கிடைக்கப்பெறவுள்ள சலுகை

 நாட்டில் பல வருடங்களாக வாகன வருமான வரிப்பத்திரம் பெறாமல், பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய வாகனங்களுக்கு சலுகை அடிப்படையில் வாகன வருமான வரிப்பத்திரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் மீள் பதிவுக்காக பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுவதனால் இவை பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை கருத்திற்கொண்டு பழைய வாகனங்களின் வாகன வருமான வரிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post