இந்நிலையில் 2வது ஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் டெஸ்டில் 13 ஆட்ட நாயகன் விருதுனை பெற்று சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
சச்சின் 200 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றதை ஸ்மித் 99 போட்டிகளிலே 13 முறை எடுத்து அசத்தியுள்ளார்.
மேலும், இங்கிலாந்திற்கு எதிராக மட்டும் 34 போட்டிகளில் 8 முறை ஆட்ட நாயகன் விருது பெற்று ஸ்மித் அசத்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றது ஜாக் காலிஸ் (23 தடவைகள்) என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த துடுப்பாட்டத்தை கொண்ட வீரர்
99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 9113 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதில் 32 சதங்களும், 37 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி சிறந்த துடுப்பாட்ட வீரர் வரிசையில் 6ஆம் இடத்தில் உள்ளார்.
ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வரும் இவர் டான் பிராட்மேனுடன் ஒப்பிடும் அளவுக்கு திறமையான துடுப்பாட்ட வீரர்.
சமீபத்தில் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் 1000 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
