ஒன்லைன் முறை மூலம் கடவுசீட்டு பெற தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்

ஒன்லைன் முறை மூலம் 11,312 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 15ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதற்கமைய, புதிய முறையின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

முன்பு சாதாரண முறையின் கீழ், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க 14 வேலை நாட்கள் ஆனது.


ஒரு நாள் சேவை

ஒரு நாள் சேவையின் கீழ் வசூலிக்கப்படும் தொகை 20,000 ரூபாயாகும். இவற்றில் 6089 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. 

ஒரு நாள் சேவையின் கீழ் 2177 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதில் 1259 பேருக்கு பணம் செலுத்தப்பட்டது.

பொதுவான சேவையின் கீழ் 9143 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அதில் 4830 விண்ணப்பங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post