வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

 இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் இன்று திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேலும், இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாகவே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் 389 இலங்கையர்கள் பணி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post