பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை! விசாரணையில் வெளியான தகவல்

 பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாக பழகி போதைப்பொருள் கொடுத்து பெண்களின் தங்கப் பொருட்களை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராஜாங்கனை பகுதியை சேர்ந்த 53 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 4 போதை மாத்திரைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post