கொழும்பிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை : ஐந்து மடங்கு அதிகரித்துள்ள நுளம்பு பெருக்கம்

 கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை - கொதடுவை பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதனால் ஜூன் மாத இறுதிக்குள் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவில் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 வீத அதிகரிப்பு

நுளம்புகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற Breteau Index மதிப்பீட்டின் படி, 5% ஆக இருக்க வேண்டிய Breteau இன்டெக்ஸ் மதிப்பு, மாவட்டத்தின் சில பகுதிகளில் 25% ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

Previous Post Next Post