விமான உதிரிப்பாகங்களுக்கான பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

 இலங்கை விமானப்படை விமானங்களின் உதிரி பாகங்களுக்கான மேற்பரப்பை உள்நாட்டிலேயே சீர்செய்யும் பராமரிப்பு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விமானப்படைத் தளமான பாலாவியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த பராமரிப்பு நிலையத்தை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன திறந்து வைத்துள்ளார்.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை புதுப்பிக்கும் பணியில் உதிரி பாகங்களின் மேற்பரப்பை சுத்திகரிப்பு செய்வதற்கு இந்த மையம் உதவும்.


நிபுணர்கள் குழு

சீனா ஏவியேஷன் டெக்னோலஜி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் நிபுணர்கள் குழு இதற்கு முழு ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மையத்தின் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post