துபாயில் கோல்டன் விசாவை பெற்ற இலங்கையின் இளம் பாடகி!

 இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா துபாயில் கோல்டன் விசாவினை பெற்றுள்ளார்.

கலை, கலாசாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு துபாய் அதிகாரிகள் வழங்கும் உயரிய விருதாக 'கோல்டன் விசா' கருதப்படுகின்றது.


உயரிய விருது

பாடகி யொஹானி இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் சமகால பாப் இசை ஆகியவற்றின் தனித்துவமான பாடல்களால் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றார்.

இவர் இலங்கையில் மாத்திரமின்றி பல வெளிநாடுகளுக்கும் சென்று பாடல்களை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Previous Post Next Post