பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு; புதினுடன் பேசிய பின்னரே பாதிப்பு; நஞ்சூட்டப்பட்டதா ?

பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோ மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து திரும்பும் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அதிபரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பெலாரசின் எதிர்க்கட்சித் தலைவரர் வலேரி செப்காலோ தெரிவித்துள்ளார்.


ரஸ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா?

பெலாரஸ் அதிபரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில்,அவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

பெலாரசின் சர்வாதிகாரத் தலைவரான 68 வயதான லுக்காஷென்கோ அதிபர் புதினின் நம்பகமான நெருங்கிய நண்பராகக் கருதப்படுகிறார்.

இந்நிலையில் அணு ஆயுதங்களை அண்மையில் ரஷ்யா பெலாரசுக்கு அனுப்பி வைத்தது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை   பெலாரஸ் ஜனாதிபதி லுகாசென்கோவின் உடல்நிலை பாதிப்பிற்கான காரணங்கள் வெளியாகாத நிலையில் ரஸ்யாவிற்கான விஜயத்தின்போதுஅவருக்கு நஞ்சூட்டப்பட்டதாக பெலாரஸ் எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Previous Post Next Post