யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் உள்ள முட்டாஸ் கடை சந்தி அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (29.05.2023) இடம்பெற்றுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீசாலையைச் சேர்ந்த இராஐரட்ணம் அபிதாஸ் என்ற 29 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது லொறியுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
