கொழும்பின் பல பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 கொழும்பின் பல பகுதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று கொழும்பில் பல இடங்களுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post