திடீர் மாற்றமடைந்த தங்கத்தின் விலை - இன்றைய தங்க நிலவரம்!

 நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு அமைய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், தங்கத்தின் விலையானது இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 647,706 ரூபாவாக காணப்படுகின்றது.


முழு விபரம்

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,950 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.


அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,850 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,950 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post