இலங்கையின் பொருளாதார மீட்சி! அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சீனா

 சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் (Sun Weidong), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 


பொருளாதார மீட்சி

இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளில் சீனாவின் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக சன் வெய்டாங் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் உதவும் வழிகளை சீனா ஆர்வத்துடன் முழுமையாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Previous Post Next Post