புலமைப் பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டில் 146 மாணவர்களின் பெறுபேறுகளில் மாற்றம்

 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டில் 146 மாணவர்களின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பரீட்சையில் சித்தி எய்தவில்லை என அறிவிக்கப்பட்ட 146 மாணவர்கள் தற்பொழுது பரீட்சையில் சித்தி எய்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை

தமிழ் மொழி மூல மாணவர்கள் 4823 உள்ளிட்ட 25157 மாணவர்கள் பரீட்சை மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மீள் மதிப்பீட்டின் போது விடைத்தாள்கள் இரண்டு ஆசிரியர்களினால் மீள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post