இலங்கை அணி 65 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது

கிறைஸ்சர்ச்சில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 355 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய நியூஸிலாந்து 373 ஓட்டங்களைப் பெற்றது. 

டெரில் மில்செல் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை இன்று(11) அடைந்து 102 ஓட்டங்களைப் பெற்றார். 

18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்களை இன்றைய(11) மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது. 

இதற்கமைய இலங்கை அணி 65 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

ஏஞ்சலோ மெத்யூஸ் 20 ஓட்டங்களுடனும் பிரபாத் ஜயசூரிய 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.




Previous Post Next Post