இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட இரணவில பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் உடைந்து அழிவடைந்த மாரவிலயிலிருந்து சிலாபம் வரை பயணிக்கக்கூடிய கடற்கரை வீதியின் இரணவில பாலமானது, இந்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒதுக்கீடுகளின் கீழ் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்
நேற்று (18) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) ஆகியோரின் தலைமையில் இந்த ஆரம்ப விழா நடைபெற்றது.

 ‘டித்வா’ அனர்த்த நிலைமை காரணமாக இந்தப் பிரதேசத்தின் போக்குவரத்து அமைப்பிற்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்பால், இரணவில மக்கள் பல மாதங்களாக படகுகள் மூலம் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தப் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் அந்த நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் உடைந்து அழிவடைந்த மாரவிலயிலிருந்து சிலாபம் வரை பயணிக்கக்கூடிய கடற்கரை வீதியின் இரணவில பாலமானது, இந்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒதுக்கீடுகளின் கீழ் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்

நேற்று (18) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) ஆகியோரின் தலைமையில் இந்த ஆரம்ப விழா நடைபெற்றது.

 ‘டித்வா’ அனர்த்த நிலைமை காரணமாக இந்தப் பிரதேசத்தின் போக்குவரத்து அமைப்பிற்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்பால், இரணவில மக்கள் பல மாதங்களாக படகுகள் மூலம் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தப் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் அந்த நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.

விசேடமாக சிலாபம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசத்தின் மீனவ மற்றும் விவசாய சமூகத்தினர் எதிர்கொண்ட சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்ததுடன், அதுவரை நிலவிய கடினமான படகுப் பயணம் முடிவுக்கு வந்ததையிட்டு பிரதேசவாசிகள் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன பின்வருமாறு கூறினார்:
 
" டித்வா சூறாவளி சந்தர்ப்பத்தில் நாம் ஒரு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது. அந்த நேரத்தில் நாம் எதிர்கொண்ட பாரிய அனர்த்த நிலைமையைத் தணிப்பதற்கு இந்தியா வழங்கிய பங்களிப்பு மிகவும் மகத்தானது. அது குறித்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். "
 
இந்திய அரசாங்கத்தினால் இந்நாட்டிற்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் டொலர் நிதித் தொகுப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மிக நீளமான பாலம் இதுவாகும்.
 
இது 240 அடி நீளத்தையும் 11 அடி அகலத்தையும் கொண்டது. இந்தப் பாலத்தின் அத்திவாரத்தை அமைப்பதற்காக 70 மில்லியன் இலங்கை ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், இந்திய இராணுவ பொறியியல் பணிக்குழு, இலங்கை இராணுவம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இந்தத் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் கீழ் எதிர்காலத்தில் நாட்டின் ஏனைய பல பகுதிகளில் மேலும் 15 பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) இதன்போது வெளிப்படுத்தினார்.
 
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தின் அரச அதிகாரிகள் உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

Previous Post Next Post