பதற்றத்தினால் திடீரென மூடப்பட்ட வான்பரப்புகள்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளமையினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான பயணத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் வழியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.

திட்டமிடப்பட்ட விமானங்கள் இயக்கம்

வான்வெளி மூடப்பட்டதன் விளைவாக மத்திய கிழக்கில் உள்ள நகரங்களுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.நேற்று ஏழு விமானங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டன.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான பயணத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் வழியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வான்வெளி மூடல்

இதேவேளை, வழித்தட மாற்றம் காரணமாக லண்டனுக்கான விமான பயணத்தின் நேரம் ஒன்றரை மணி நேரம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பதற்றநிலை காரணமாக வான்வெளி மூடல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கடுமையாக பாதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.   


Previous Post Next Post