தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களை வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் 1,050 இன் கீழ் தற்போது 150,000 பணியாளர்கள் அளவில் பணிபுரிகின்றமை பதிவாகியுள்ளது.
1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களை முறைமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்கள் தொடர்பாக செயற்படுவதற்கான சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் குறித்த நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களை பயனுள்ள வகையில் ஒழுங்குபடுத்தவும் வினைத்திறனாக சேவையை வழங்குவதற்கு குறித்த சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாமை அவதானிக்கப்பட்டுள்ளது.