தபால் போக்குவரத்து சேவையை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு புதிய 10 லொறிகள் மற்றும் 20 கெப் வாகனங்கள் இன்று பகிர்ந்தளிப்பு

 கடந்த வருடத்தின் பரிமாற்றத்திற்கு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி சென்ற நாட்டில் தபால் சேவையின் போக்குவரத்து வசதிகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக 590 கோடி ரூபாய் பெருமதியான பத்து லொறிகள் மற்றும் 20 வாகனங்கள் நாட்டின் தபால் சபைக்கு வழங்குவதற்கு மற்றும் குறித்த திட்டத்திற்கு ஏற்ப தபால்காரர்களின் சைக்கிள்களுக்காக பொதிப் பெட்டிகளைப் (Bicycle Carriers) பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (12) பிற்பகல் 1.00 மணிக்குத் தபால் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.


 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் தபால் திணைக்களத்தின் சேவைகளை முன்னேற்றுவதற்கான நோக்கில் வழங்கப்படும் இந்த லாரிகள் மற்றும் தபால் பொதிப் பெட்டிகள் (Bicycle Carriers) மத்திய தபால் பரிமாற்றத்தில் இருந்து நாடு முழுவதையும் உள்ளடக்கியவாறு COD, Slp Courier உட்பட சகல தபால் பொருட்களை வினைத்திறனாக பகிர்ந்தளிப்பதற்காகப் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாட்டின் தபால் சேவையில் கடிதங்கள் மற்றும் தபால் பொருட்களை இலகுவாகவும் வினைத்திறனாகவும் பகிர்ந்தளக்கும் நடவடிக்கைகள் மேலும் ஒழுங்குமுறை மற்றும் வலுப் படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த வருடத்தில் இலங்கையின் தபால் திணைக்களத்தில் பல்வேறு தொழில்கள் மற்றும் புதிய ஆட்சேர்ப்புக்கள், நிரந்தரப்படுத்தல், என பல விடயங்கள் இடம் பெற்றதுடன், புதிய தபால் அலுவலகங்களுக்காக அடிக்கல் நாட்டுதல், திறந்து வைத்தல் போன்ற பல நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் தபால் துறையில் ஆளணி மற்றும் பௌதீக பழங்களை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
 
இந்நிகழ்வில் ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்தின, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க, தபால் மா அதிபர் றுவன் சரத்குமார உட்பட பல கலந்து கொள்ளவுள்ளனர்.
Previous Post Next Post