உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணை



புத்தளம் - வென்னப்புவ, லுனுவில பகுதியில் பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த, உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானமை தொடர்பில், விசாரணை மேற்கொள்வதற்கான விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
வான்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஒன்பது பேர் அடங்கிய வகையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், விபத்துக்குள்ளான குறித்த உலங்கு வானூர்தி சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
 
விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியின் விமானி உயிரிழந்த நிலையில், அவரின் பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை வான்படை அறிவித்துள்ளது.
Previous Post Next Post