இளைஞர்கள், குழந்தைகள் மீது அதிக காய்ச்சல் பாதிப்பு அபாயம் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை



இவ்வருடத்தில் வழமையை விட அதிக அளவிலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படலாம் என ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் (Hertfordshire) மாவட்ட சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 
 
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் எதிர்வரும் சில வாரங்களில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக முகக் கவசம் அணிவதுடன் மற்றவர்களுடனான நேரடி தொடர்பினை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
இந்த நிலையில், மாவட்ட பொதுச் சுகாதார நிர்வாக உறுப்பினர் அஜந்தா ஹல்டன், தேசிய விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளுக்காக அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Previous Post Next Post