நீண்ட கால கொவிட் தொற்று நோய்க்கு உட்பட்டவர்களின் குருதியில் விசித்திரமான கட்டிகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மாற்றங்களை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் தொற்றிற்கு உறுதியான மேலதிக புதிய சிகிச்சையினை வழங்க முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பாலான மக்கள், சிறிய அளவிலான சளி, தொண்டை வலி அல்லது இருமல் மற்றும் காய்ச்சலுக்குப் பின்னர் கொவிட் - 19 இல் இருந்து முழுமையாகக் குணமடைகிறார்கள்.
ஆனால் பல நோயாளர்கள் நீண்ட கொவிட் வைரசுடன் தொடர்புடைய அறிகுறிகளால் பாதிப்படையலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சோர்வான தன்மை, மூளை மூடுபனி மறைவு, உடல் உபாதை, மற்றும் மூச்சுத் திணறல் என்பன புதிய ரக நோய்க்கான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த வகையான தொடர்ச்சியான அறிகுறிகளுக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் நீண்ட கால கொவிட் நோயாளர்களின் குருதியில் உள்ள சிறிய கட்டிகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டல செல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான அடிப்படை தொடர்புகளை மருத்துவ விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதற்கு அமைய விரைவில் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தால், புதிய சிகிச்சைகளை மேலும் இலகுவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.