வட மாகாண ஆளுநர் மற்றும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கிடையில் கலந்துரையாடல்



வடக்கு மாகாண  ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில்  நேற்று முன்தினம் 02.11.2024   இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. 

அத்துடன் பொதுமக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விடைகள் விரிவாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் ஆளுநரினால்  மரக்கன்று நடுகை மேற்கொள்ளபட்டது. பின்னர் விடுவிக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post