ராஜகிரிய பகுதியிலுள்ள கட்டடமொன்றில் தீப்பரவல்



கொழும்பு (Colombo) - ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த தீ விபத்து சம்பவமானது இன்றையதினம் (01.11.2024) வாகனம் பழுது பார்க்கும் நிலையமொன்றில் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு சேவை 

தீயை அணைக்க கோட்டை மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புப் பிரிவு மற்றும் அதன் திணைக்களத்தின் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள வீட்டுத் தொகுதிக்கும் பரவியுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்திற்கான காரணமோ, சேத விவரமோ இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post